புதுடெல்லி: விபத்தில் 8 பேர் பலி

புதுடெல்லி: ஆக்ராவில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று நேற்றுக் காலை நொய்டாவை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. யமுனா விரைவுச் சாலையை நெருங்கியபோது அப்பேருந்து லாரி மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. 
இச்சம்பவம் அதிகாலை 5 மணி அளவில் நிகழ்ந்தது. அப் பகுதியில் இருந்தவர்கள் விபத்து குறித்து போலிசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
பேருந்தில் பயணித்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர்.  
30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
மாண்டோரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக் கப்பட்டது. விபத்து நிகழ்ந்த விதம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேகமாக மோதியதால் பேருந்தின் முன்பகுதி முற்றாக சிதைந்துவிட்டது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon