மோடி: காங்கிரசை ஒழித்தால் வறுமையும் ஒழியும்

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை ஒழித்தால் வறுமை தானாக ஒழிந்துவிடும் என் றார். “வறுமை ஒழிப்பு (இந்திரா காந்தி வாக்குறுதி) என்ற முழக்கத்தை எனது இளமைப் பருவத்திலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். பல தலைமுறை கள் கடந்தன. அவர்கள்தான் (காங்கிரஸ்) வளர்ச்சி அடைந்து கொண்டே இருந்தார்கள். ஆனால், ஏழைகள் அதைக்காட்டிலும் ஏழை களாக ஆனார்கள். ஏழைகளை காங் கிரஸ் கட்சி வஞ்சிக்கிறது என்பதை மக்கள் அறிந்துகொண்டார்கள். 
“மக்களுக்காக வங்கிக் கணக்கு களைத் தொடங்க முடியாதவர்கள், தற்போது ஏழைகளுக்கான பணத்தை நேரடியாக அவர்களது வங்கிக் கணக் கில் வரவு வைப்போம் என்று சொல் கிறார்கள். அவர்கள் அதை எப்படி செய்ய முடியும்?,” என்றார் மோடி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon