பிரியங்கா: சொந்த மக்களை புறக்கணித்து உலகம் சுற்றுவதா?

பிரியங்கா: சொந்த மக்களை புறக்கணித்து உலகம் சுற்றுவதா?

1 mins read

ரேபரேலி: பிரதமர் மோடி இரண் டாவது முறையாக வாரணாசியில் போட்டியிடுகிறார். பிரியங்கா காந்தி, சோனியா காந்தியின் ரேப ரேலி தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு சோனியாவே மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் ரேபரேலியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரியங்காவிடம் தேர்தலில் போட்டி யிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, "ஏன் ரேபரேலி? வாரணாசியில் நான் போட்டியிடக் கூடாதா?," என்று தொண்டர்களிடம் பிரியங்கா கேட் டார். கட்சி கேட்டுக்கொண்டால் போட்டியிடுவேன் என்று ஏற் கெனவே பிரியங்கா தெரிவித்துள் ளார். உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப் பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், "பிரியங்கா தேர்த லுக்காக வெறும் 4 மாதங்கள் மட்டும் அங்கு அனுப்பப்பட வில்லை; பெரிய திட்டத்துடன் தான் அங்கு அவர் அனுப்பப்பட் டுள்ளார்," என்று கூறியிருந்தார். இந்நிலையில், பைசாபாத்தில் பிரசாரம் செய்த பிரியங்கா, "வார ணாசி தொகுதிக்கு பிரதமர் மோடி வரவில்லை என புலம்பு கிறார்கள். உலகம் முழுவதும் சுற்றிவந்து தலைவர்களைக் கட்டிப்பிடிக்கும் மோடிக்கு தமது தொகுதி மக்களை கவனிக்க நேரம் இல்லை," என்றார்.