கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத் தைச் சேர்ந்த கருநாகப்பள்ளியைச் சேர்ந்த துளசிதாஸ், விஜயலட்சுமி ஆகியோரின் மகள் துசரா (வயது 27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்துலால் (30) என்பவருக் கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. பெண்ணின் தந்தை திரு மணத்தின்போது பேசப்பட்ட வர தட்சணையைக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத் திரமடைந்த கணவர் மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து புதுப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக புதுப்பெண் துசராவின் நடமாட்டம் இல்லை. துசரா வீட்டில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். சத்தம்போடாமல் இருக்க வாயில் துணி கட்டப்பட்டிருந்தது. காலையில் ஒரு டம்ளர் சர்பத், மதியம் ஒரு டம்ளர் தண்ணீர், இரவு மீண்டும் ஒரு டம்ளர் சர்பத் மட்டுமே ஜன்னல் வழியாக கொடுத்தனர். இந்நிலையில் நேற்று துசரா உடல் நிலை திடீரென மோச மானது. இதற்குமேல் வைத் திருந் தால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த கணவரும் மாமியாரும் சேர்ந்து துசராவை கருநாகப்பள்ளி யில் உள்ள அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துசரா பரிதாபமாக இறந்தார். துசராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் போலிசில் புகார் செய்தனர். காவல் துறையினர் சந்து லால் மற்றும் அவரது தாய் கீதா லால் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், போதிய வரதட்சணை கிடைக்காத ஆத்திரத்தில் துசராவை வீட்டில் அடைத்து வைத்துப் பட்டினி போட்டோம். திருமணத்தின்போது 60 கிலோ எடை இருந்தார். ஒன்றரை மாதம் தண்ணீர் மட்டுமே கொடுத்ததால் 40 கிலோ எடை குறைந்து இறக்கும்போது 20 கிலோ எடை மட்டுமே இருந்தார். பட்டினி போட்டே கொலை செய் தோம் என்று தாயும் மகனும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் கருநாகப்பள்ளி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
கேரளாவில் வரதட்சணைக் கொடுமை: ஒன்றரை மாதம் பட்டினி போட்டு கொன்ற தாயும் மகனும் கைது
2 mins read

