'பாஜக தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்?'

'பாஜக தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்?'

2 mins read
f9426487-c894-4d4d-9225-edd338b41398
கர்நாடக முதல்வர் குமாரசாமி. -

பெங்களூரு: நாங்கள் ஜனநாயகத் தைச் சிதைக்கும் பணியை செய்யவில்லை. என்னால் ஜன நாயகம் சிதைந்துவிட்டது என்று சொல்ல எடியூரப்பாவுக்குத் தகுதி இல்லை. எனக்கு எதிராக எடி யூரப்பா போட்ட வழக்குகளைக் கடந்த 12 ஆண்டுகளாக எதிர் கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. நேற்று செய்தியாளர் கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "தன் மீதான வழக்குகளை எடி யூரப்பா எப்படி நீக்கிக்கொண்டார் என்பது எனக்குத் தெரியும். "அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படும் அமைப்புகளை நாங் கள் தவறாக பயன்படுத்தவில்லை. "சட்டப்படி போராட்டம் நடத்து கிறோம். நான் முன்பு முதலமைச் சர் பதவியை விட்டுச் செல்லும் போது, பிஎம்டிசியில் ரூ.1,000 கோடி முன்பணம் செலுத்தியிருந் தேன். அதன் பிறகு அந்தத் துறைக்கு ஆர்.அசோக் அமைச்ச ராக வந்த பிறகு பிஎம்டிசி நிறுவனத்தையே சீரழித்து விட் டார். "வருமானவரிச் சோதனை நடத்திய அதிகாரிகளிடம் பணம் சிக்கியுள்ளதா? பத்து ரூபாயாவது கிடைத்ததா? எதற் காக இந்தச் சோதனை நடத்த வேண்டும்? "உள்நோக்கத்துடன் வரித் துறையினர் இந்தச் சோதனையை நடத்தி இருக்கின்றனர். "பாஜக தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்? பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் ஏழைகளா? "பணம் இல்லாமல் கைகூப்பி கும்பிட்டுக் கொண்டு வாக்கு கேட்கிறார்களா? நாங்கள் அனைத்து வகையான போராட் டத்திற்கும் தயாராக உள்ளோம். "துமகூரு தொகுதி பிரச் சினை முடிந்தது. போட்டி வேட் பாளர் முத்தஹனுமே கவுடா தனது மனுவை மீட்டுக் கொண் டார். பா.ஜனதா, கொள்ளையடிக் கும் கலாசாரம் கொண்டது. முன் னாள் முதலமைச்சர் எடியூரப்பா, ஆர்.அசோக் என்னென்ன செய் தனர் என்பது எனக்குத் தெரியும்," என்றார் குமாரசாமி.