புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சித் தலைவரான அமித்ஷாவின் பேத்தி காவி நிற தொப் பியை அணிய மறுத்துவிட்டார். இந்தக் காணொளி ஊடகங் களில் பரவி பெரும் பரபரப்பை ஏற் படுத்தி வருகிறது. திரு அமித்ஷா நேற்று முன்தினம் நடைபெற்ற ஊர்வலத்தில் தனது பேரக் குழந்தைகளுடன் பங்கேற்றார். அப்போது தனது பேத்தியை கையில் தூக்கி வைத்துகொண்ட அமித்ஷா, தன்னிடமிருந்த காவி தொப்பியை எடுத்து பேத்தியின் தலையில் மாட்டினார். ஆனால் அந்த குழந்தை அதனை அணிய மறுத்துவிட்டது. ஆனால் அதே சமயத்தில் ஏற்கனவே அணிந்திருந்த தொப்பியை மட்டும் குழந்தை அணிந்து கொண்டது.
பாஜக தொப்பியை அணிய மறுத்த அமித்ஷாவின் பேத்தி
1 mins read
-

