ராஞ்சி: சிறையில் இருந்தாலும் அரசியலில் காய் நகர்த்தி வருகிறார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். ஜார்க்கண்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகள், 'கிராண்ட் அலையன்ஸ்' என்ற கூட்டணியை அமைத்துள்ளன. இந்த அணியில் லாலுவின் ராஷ்ட்டிரீய ஜனதா தளத்துக்கு 'பலமு' தொகுதி ஒதுக்கப்பட் டுள்ளது. ஆனால், அவரது கட்சி சார்பில் சத்ரா தொகுதியிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என லாலுவின் மனைவி ராப்ரி தேவி அறிவித்துள்ளார். வேட்பாளர் சுபாஷ் யாதவின் வேட்புமனுத் தாக்கலுக்கான பரிந்துரை கடிதத் தையும் அவர் கொடுத்துள்ளார். இந்தத் திடீர் அறிவிப்பு, காங் கிரஸ் கூட்டணியில் குட்டையைக் குழப்பியுள்ளது. இதை எப்படி சமாளிப்பது என காங்கிரஸ் தவித்து வருகிறது. பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, சிறை யில் உள்ள லாலுவைச் சந்தித்துப் பேசி முடிவு செய்ய கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். லாலு குடும்பத்தின் குழப்பங்களால் கூட்டணி சேர்ந்த காங் கிரஸ், ஜார்க்கண்ட் மோர்ச்சா கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.
சிறையில் இருந்தபடியே அரசியல் செய்யும் லாலு
1 mins read

