காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான ஃபேஸ்புக் பக்கங்கள் நீக்கம்

காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான ஃபேஸ்புக் பக்கங்கள் நீக்கம்

2 mins read

புதுடெல்லி: ராகுல் காந்தி தலை மையிலான காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய சுமார் 687 பக்கங் களை நீக்குவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் ஃபேஸ் புக்கின் நடவடிக்கை காங்கிரசுக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்த லில் சமூக வலைதளங்கள் முக் கிய பங்கு வகிக்கும் என ஏற் கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி நேரடி பிரசாரங் களைவிட சமூக வலைதளங்களில் வீடியோ, புகைப்படம், 'மீம்ஸ்' மூலமாக தேர்தல் சூடுபிடித்துள் ளது. ஒவ்வொரு கட்சிகளும் புதிய குற்றச்சாட்டுகளையும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி பிரசாரங்களில் ஈடு பட்டு வருகின்றன. இந்நிலையில் ஃபேஸ்புக் எடுத் துள்ள நடவடிக்கை காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதாவது காங்கிரசுடன் தொடர்பில் இருக்கும் சுமார் 687 பக்கங்களை பேஸ்புக் நீக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு முக்கியமான அரசியல் கட்சியை எதிர்த்து பேஸ்புக் எடுக்கும் இந்த நடவடிக்கை முதல் முறை என்று நம்பப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பேஸ்புக், விசார ணையை மேற்கொண்டதில் தனி நபர்கள் போலியான கணக்குகளை பயன்படுத்தியுள்ளது தெரிய வந்தது," என்று கூறியது. "அவர்கள் தங்கள் உள்ள டக்கத்தை பரப்புவதற்கும் அவர் களுக்கான எதிர்வினையை அதி கரிக்கவும் பல்வேறு குழுக்களில் சேர்ந்துள்ளனர். எங்களுடைய ஆய்வில் காங்கிரஸ் கட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவுடன் இணைக் கப்பட்ட கணக்குகள் என தெரிய வந்தது. அதிகாரபூர்வமற்ற வகையில் கணக்குகளை பரா மரிப்பது காரணமாகவே நட வடிக்கை எடுக்கப்படுகிறது," என்றும் அது தெரிவித்தது. ஆனால் அவர்களுடைய பதிவு செய்யும் செய்திகள், தகவல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று 'ஃபேஸ்புக்' கூறியது.