சுடச் சுடச் செய்திகள்

இந்தியா அழித்த செயற்கைக்கோளின் சிதைவுகளால் விண்வெளி வீரர்களுக்கு ஆபத்து

சோதனை நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா தனது செயற்கைக்கோள் ஒன்றை அழித்ததால் விண்வெளியில் 400 சிதைவுத் துண்டுகள் உருவானதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் விண்வெளிக்கு இனி பயணம் செய்யப்போகும் விண்வெளி வீரர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்நிலையம் கூறியது.

உலகின் விண்வெளி வல்லரசு நாடுகளின் வரிசையில் இடம்பிடிக்க விரும்பியதால் இந்தியா ஏவுகணைச் சோதனை ஒன்றில் தாழ்வாகப் பறக்கும் அதன் செயற்கைக் கோள் ஒன்றைச் சுட்டு சின்னாபின்னமாக்கியது. 

இவ்வாறு விண்வெளியில் சிதைவுகளை உண்டாக்குவது மிக மோசமானது என்றும் அது எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு ஒவ்வாத நடவடிக்கை என்றும் நாசாவின் தலைவர் ஜிம் பிரைடன்ஸ்டைன் தெரிவித்துள்ளார். சிதறிய செயற்கைக்கோளின் சிதைவுத்துண்டுகளில் கிட்டத்தட்ட 60 கண்டுபிடிக்கப்பட்டாலும் சில மிகச் சிறிதாக இருப்பதால் அவற்றை நாசா கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon