இந்தியா: 'வாட்ஸ்அப்' புதிய முட்டுக்கட்டை

இந்தியா: 'வாட்ஸ்அப்' புதிய முட்டுக்கட்டை

1 mins read
01d95654-9949-4e62-99bf-fe4e7340368f
-

இந்தியாவில் பகிரப்படும் தகவ லின் உண்மைத்தன்மையைச் சோதிக்கும் புதிய நடவடிக்கையை வாட்ஸ்அப் நேற்று தொடங்கியது. இன்னும் ஒரு வாரத்தில் மக்களவைத் தேர்தல் தொடங்க இருக்கும் நிலையில் பொய்ச் செய்தி பரவலைத் தடுக்க மேற் கொள்ளப்பட்டிருக்கும் ஆக அண்மைய நடவடிக்கை இது. பொய்ச் செய்தி என்பது ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்குப் பெரும் தலைவலியாக உரு வெடுத்து வருகிறது. நம்பகத் தன்மை வாய்ந்த செய்திகளைக் காட்டிலும் பொய்ச் செய்திகள் வேமாகப் பரவி பாதிப்புகளை ஏற் படுத்துவதாகக் கருதப்படுகிறது. எனவே இவற்றைத் தடுக்க சமூக ஊடகங்களை அனைத்து லக அரசாங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் கிட்டத்தட்ட 200 மில்லியன் பேர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துகிறார் கள். தவறான தகவல்களைப் பரப்ப இடம் கொடுப்பதாக சமூக ஊடக நிறுவனங்கள் மீது குறைகூறப்பட்டு வருகிறது. குறிப்பாக, தேர்தல் போன்ற பெருவாரியான மக்கள் பங்கேற் கும் பெரும் நிகழ்வுகளில் பொய்ப் பிரசாரம் மலிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த குறைபாட்டைப் போக்கவும் பொய்ச்செய்திகள் பரப்பப்படு வதைத் தடுக்கவும் ஃபேஸ்புக் நிறுவனமும் அதன் கட்டுப்பாட் டிலுள்ள வாட்ஸ்அப்பும் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.