"பொய்யும் புரட்டும் நிறைந்த அறிக்கை" - காங்கிரசை குறைகூறிய மோடி

"பொய்யும் புரட்டும் நிறைந்த அறிக்கை" - காங்கிரசை குறைகூறிய மோடி

1 mins read
69f67bde-1739-47e4-8bef-24afa03e2ac5
-

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை நேர்மையற்றது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறைகூறியுள்ளார். இது தேர்தல் அறிக்கையே அல்ல என்று அருணாசல பிரதேச மாநிலத்தில் பிராசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த திரு மோடி கூறினார்.

வரும் பொதுத்தேர்தலுக்கான காங்கிரசின் அறிக்கையை அதன் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். பொருளியல், சமூகம் தொடர்பான ஐந்து முக்கிய திட்டங்களைப் பற்றி அவர் புதுடெல்லியில் நேற்று விளக்கினார். விவசாயிகளுக்கு உதவி, சீர்குலைவுச் சட்டத்தை ரத்து செய்வது, தமிழகத்தில் 'நீட்' எனப்படும் இந்திய மருத்து நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை அற்த அறிக்கை குறிப்பிடுகிறது.

"இந்தப் பாதுகாவல் நம் நாட்டை பாதுகாக்கும் நேரத்தில் அதிகாரத்திற்கு அலையும் காங்கிரஸ் இவ்வளவு மட்டமாக இறங்கியுள்ளது. காங்கிரசின் கை யாருக்கு? குடிமக்களுக்கா? அல்லது நாட்டை வெறுப்பவர்களுக்கா?" என்றார் திரு மோடி.

பொய்க்கும் உண்மைக்கும் இடையிலான தேர்தல் இது என்று அவர் கூறியதற்கு பலத்த கரவொலிகள் எழுந்தன.

ஏப்ரல் 11ஆம் தேதி நிகழும் முதல் சுற்று தேர்தலில் வாக்களிக்கும் மாநிலங்களில் அருணாசல பிரதேசமும் ஒன்று.