'பாஜகவின் 'நமோ டிவி' உரிமம் பெற்ற தொலைக்காட்சியல்ல'

'பாஜகவின் 'நமோ டிவி' உரிமம் பெற்ற தொலைக்காட்சியல்ல'

1 mins read

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர் தல் பணிகளில் அரசியல் கட்சி கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக அண்மையில் 'நமோ டிவி' தொடங்கப்பட்டது. இந்த தொலைக்காட்சி சின் னத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் உள்ளது. மோடியின் பிரசாரம் தொடர்பான செய்தி களை இந்தத் தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அம லில் உள்ள நிலையில், 'நமோ டிவி' தொடங்க அனுமதி அளித் தது குறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இரண்டு கட்சி களும் புகார் அளித்தன. இந்தப் புகார்களை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், நாடாளுமன் றத் தேர்தல் நேரத்தில் 'நமோ டி.வி.'யைத் தொடங்க அனுமதி அளித்தது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்குப் பதிலளித்த தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சு, 'நமோ டிவி' உரிமம் பெற்ற தொலைக்காட்சி அல்ல என்றும் டிடிஎச் விளம்பரத் தளம் என்றும் கூறியுள்ளது. இதேபோல், கடந்த 31ஆம் தேதி 'நானும் காவலன்தான்' என்ற தலைப்பில் மோடி பேசி யதை, சுமார் ஒரு மணி நேரம் நேரலையாக ஒளிபரப்பியதற்காக விளக்கம் கேட்டு தூர்தர்ஷன் நிறுவனத்துக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யிருப்பது குறிப்பிடத்தக்கது.