'காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமற்றவை; அபாயகரமானவை

'காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமற்றவை; அபாயகரமானவை

1 mins read

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை ஒருபோதும் அமல்படுத்த முடியாது என்றும் அவை மிகவும் ஆபத்தானவை என்றும் கூறியுள்ளார் மத்திய பாஜக அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. தேசவிரோதச் சட்டத்தை நீக்குவோம் என்று வாக்குறுதி அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, ஒரு வாக்கு பெறுவதற்குக்கூட தகுதியற்றது என்று அருண் ஜெட்லி சாடியுள்ளார். அத்துடன் விவசாயக் கடன் கள் தள்ளுபடி செய்வது குறித்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்ததற்கு எவ்வித ஆதராமும் இல்லை," எனக் கூறினார். "காங்கிரசின் வாக்குறுதிகள் அமல்படுத்தப்பட்டால் கிளர்ச்சி யாளர்களும் பயங்கரவாதிகளுமே நம்மை ஆளுவர். இதனை காங்கிரஸ் ஏற்படுத்த நினைத்தால் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது," என்றார் அருண் ஜெட்லி.