பெங்களூர்: மக்களவைத் தேர்த லில் மக்களுக்கு விநியோகிப்ப தற்காக, சப்பாத்திக்குள் ரூபாய் நோட்டை மறைத்து விநியோகம் செய்யும் முறையை காணொளியாக ரூபா ஐபிஎஸ் வெளியிட்டுள்ளார். கடந்த 10ஆம் தேதி மக்க ளவைத் தேர்தல் குறித்த அறி விப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன் றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அர சியல் கட்சிகள் தேர்தல் பிர சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 20 நாட் களாக நாடு முழுவதும் ஆயிரக் கணக்கிலான அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்டு வருகினறன. தனியார் கார், பேருந்துகள், அரசுப் பேருந்துகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகியவற்றில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பறக்கும் படைகள் மூலம் ரூ.600 கோடி மதிப்பிலான பணம், மது, இலவசப் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதில் தமிழகத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தொகை சுமார் ரூ.71 கோடி. இந்நிலையில் பண விநியோகம் குறித்து தனது டுவிட்டர் பக்கத் தில் பதிவிட்டுள்ள ரூபா ஐபிஎஸ், "வாக்காளர்களைக் கவர பயன் படுத்தும் நூதன வழிகள் இவை. "சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்கவும்," என்று பதிவிட்டுள்ளார். அதுதொடர்பான காணொளியையும் தனது பதிவில் இணைத்துள்ளார். கர்நாடகச் சிறைத் துறையின் முதல் பெண் டிஐஜியான ரூபா ஐபிஎஸ், பெங்களூர் மத்திய சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ் சம் கொடுத்ததாகக் கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சப்பாத்தியை இரண்டாகப் பிளந்தால் ரூ.2,000; தேர்தல் பண விநியோக உத்தி
2 mins read
வாக்காளர்களுக்குக் கொடுக்க சாப்பாத்திக்குள் 2000 ரூபாய் நோட்டை மறைத்து வைக்கும் காணொளிக் காட்சி ஒன்றை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். படம்: ஊடகம் -

