ரூ.176,000 கோடி சொத்து - வேட்பாளர் சவால்

ரூ.176,000 கோடி சொத்து - வேட்பாளர் சவால்

1 mins read

சென்னை: நெல்லை ஜெயமணி யின் மகனும் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளருமான மோகன்ராஜ் என்பவர் சென்னை பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதியில் சுயேட்சை யாகப் போட்டியிடுகிறார். இவர், தனக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாகவும் 4 லட்சம் கோடி ரூபாய்க்குக் கடன் இருப்பதாகவும் போலியான ஆவ ணங்களைத் தாக்கல் செய்து பச்சைமிளகாய்ச் சின்னத்தில் தேர் தலில் போட்டியிடத் தகுதி பெற்று உள்ளதாக அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் கண்டிப் பாக இருப்பது போல நடிப்பதாகக் கூறும் இவர், ஆணையத்தினர் தங்கள் பணிகளைச் சரிவர செய் வது கிடையாது என்பதை மெய்ப் பிக்கும் வகையில் இத்தகவலை வெளியிடுவதாகக் கூறினார். பல ஆண்டுகள் நேர்மையான காவல் ஆய்வாளராக பணிபுரிந்து விட்டு பணம் சம்பாதிப்பதற்காக டி நகரில் பணிபுரிந்த கடைசி 3 ஆண்டுகளில் லஞ்சம் பெற்று உயர் அதிகாரிகளுக்கு வழங்கிய தால் எந்த நடவடிக்கையும் இன்றி தான் தப்பியதாகவும் தெரிவிக்கும் இவர், முடிந்தால் தன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட் டும் என்று சவால் விட்டுள்ளார்.