சென்னை: தமிழ்நாட்டில் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு ஆக அதிக மாக பணமும் நகைகளும் பல இடங்களில் கைப்பற்றப்பட்டு வரு கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் 39 தொகுதிகளில் 24 தொகுதிகளில் கோடானுகோடி பணம் வாக்காளர்களுக்கு விநி யோகிக்கப்பட்டு வருவதாக வேவுத்துறை மூலம் தேர்தல் ஆணையத்திடம் தெரியப்படுத்தப் பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலில் ரூ. 10,000 கோடி அளவுக்குப் பணம் புழங்கும் என்றும் நூதன மான பல வழிகளில் அவற்றை வாக்காளர்களுக்கு விநியோகிக்க அரசியல் கட்சிகள் திட்டமிடு வதாகவும் வேவுத்துறையினர் கண்டறிந்து இருக்கிறார்கள். சேலம் அருகே நேற்று உரிய ஆவணங்கள் இல்லாமல் 100 கிலோ தங்கம் ஒரு வாகனத்தில் கைப்பற்றப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தேர்தல் பறக்கும் படை யினர் நடத்திய வாகனத் தணிக் கையில் அரசுப் பேருந்தில் ஏழு பைகளில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ. 3 கேடியே 47 லட்சத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து மாநிலம் முழுவதும் சோதனைகளை தீவிரப்படுத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கட்சியினரின் வீடுகள், அலு வலகங்கள் இதர இடங்கள் எங் கும் சோதனைகள் நடக்கின்றன. இதை அறிந்து சுதாரித்துக் கொண்ட அரசியல் கட்சியினர், தங்கள் வியூகத்தை மாற்றுகிறார் கள். வாக்காளர்களுக்கு விநி யோகிக்கப்பட உள்ள பணத்தைக் கட்சியினர் பலரும் விசைப்படகு களுக்கு மாற்றி வருகிறார்கள். மீனவர்கள் பணத்துடன் படகு களில் சில நாட்களுக்கு கடலி லேயே இருப்பார்கள் என்றும் அவர் களிடம் இருந்து அரசியல்வாதிகள் அப்போதைக்கு அப்போது பணத் தைப் பெற்றுக்கொள்வார்கள் என் றும் இதன் மூலம் ஆணையத்தின் கண்களில் இருந்து தப்பிவிடலாம் என்றும் அரசியல்வாதிகள் கணக் குப் போடுகிறார்கள். ஆனால் இந்தத் தேர்தலில் எப்படியும் பணப் புழக்கத்தைத் துடைத்து ஒழித்துவிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் திட்ட வட்டமாக முடிவு செய்துவிட்டது. இதனை அடுத்து ஆணை யத்திற்கும் அரசியல் கட்சிகளுக் கும் இடையில் இந்த விவகாரத்தில் நீயா நானா போட்டி சூடுபிடித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
பணம்: அரசியல்வாதிகளும் ஆணையமும் 'நீயா நானா'
2 mins read
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.3.47 கோடி பணம், அரூர் கோட்டாட்சியர் புண்ணியகோடி (நடு) வசம் ஒப்படைக்கப்பட்டது. படம்: தமிழக ஊடகம் -

