13,000 கோடி கடனில் தவிக்கும் பிஎஸ்என்எல்; 54,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

13,000 கோடி கடனில் தவிக்கும் பிஎஸ்என்எல்; 54,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

1 mins read

புதுடெல்லி: பிஎஸ்என்எல் நிறுவ னம் 54,000 பணியாளர்களை நீக்க அனுமதி அளித்துள்ளது. மேலும், நிறுவனத்தை மூடும் வகையில் நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருவதாகக் கூறப்படு கிறது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 7,993 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தது. மேலும், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த நிலையில், இப்போது 54,000 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க பிஎஸ் என்எல் அனுமதி அளித்துள்ளது. மேலும், ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கவும் முடிவு செய்துள் ளது. இது தொடர்பாக 10 முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிஎஸ்என்எல் ஒப்புதல் வழங்கியுள் ளது. அதில், பணியாளர்கள் நீக் கத்தையும், விருப்ப ஓய்வுபெறும் வயது 50 ஆக குறைக்கப்படு வதையும் முக்கியமானதாகக் கரு தப்படுகிறது. பிஎஸ்என்எல்லின் நடவடிக்கையால், அங்கு பணி யாற்றும் 30 விழுக்காட்டினர் வேலையை இழக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, கடந்த 12 ஆண்டு களாக பிஎஸ்என்எல், ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு செய்யா மல் இழுத்தடித்து வருகிறது. இதே போல், தினக்கூலி அடிப்படையில் வேலை பார்ப்பவர்களுக்கும் சம் பளம் தராமல் சமாளித்து வருகி றது. பெரும் போராட்டங்களுக்குப் பிறகே தினக்கூலி ஊழியர்களுக் குச் சம்பளம் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் விரைவில் மூடுவிழாவுக்குக் கொண்டுசெல்லும் என்று கூறப் படுகிறது.