சுடச் சுடச் செய்திகள்

மாயாவதி: நானும் காவலன் என்று  முழங்குவதால் பாஜக வென்றுவிட முடியாது

ஹைதராபாத்: மக்களவைத் தேர்தல் பிரசார மேடைகளில் “நானும் காவலன்” என்று முழங்குவதால் மட்டும் பாஜகாவால் தேர்தலில் வென்றுவிட முடியாது என்று கூறியிருக்கிறார் மாயாவதி. ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் எதையும் சாதிக்கவில்லை. மோடி ஆட்சியில் உண்மையான வளர்ச்சி ஏற்படவில்லை.  இடஒதுக்கீட்டுப் பிரச்சினையால் முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. ஆந்திராவில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும், அதேபோல் தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தோல்வியைச் சந்திக்க வேண்டும். மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால், ஆந்திராவுக்கு நிச்சயம் சிறப்புத் தகுதி வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon