காயமடைந்த பத்திரிகையாளர்களுக்கு ராகுல், பிரியங்கா சாலையில் இறங்கி உதவி

காயமடைந்த பத்திரிகையாளர்களுக்கு ராகுல், பிரியங்கா சாலையில் இறங்கி உதவி

1 mins read
c41a106b-f2f1-4dc5-adce-318d8b98f7cc
காயமடைந்த ஒரு பத்திரிகையா ளரின் காலணிகளை பிரியங்கா காந்தி கையில் ஏந்தியவாறு உதவிய செயல் காணொளியாக பரவியது. படம்: சமூக ஊடகம் -

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை நேற்று முன்தினம் அவர் தாக்கல் செய் தார். அப்போது அவரது சகோதரி பிரியங்கா காந்தி, முன்னாள் முதல் வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் பலர் ராகுலுடன் இருந் தனர். வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து பேரணியாக வேனில் நின்றபடி சென்றார். அந்தப் பேரணியின்போது பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த தடுப்புக் கம்புகள் உடைபட்டு விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பத்திரிகையாளர்கள் காயமடைந் தனர். அதனைத் கண்டதும் வேனி லிருந்து இறங்கிய ராகுல், பத்தி ரிகையாளர்களுக்கு உதவினார். அவர்களை ஆம்புலன்ஸ் வாகனத் தில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்ப அவருடன் பிரியங்கா காந்தியும் உதவி செய்தார். முன்னதாக, ராகுல் காந்தி வருகையால் கேரளாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரது வாகனப் பேரணிக்கும் ஏராளமான போலிசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனினும் ராகுலையும் பிரியங் காவையும் காண காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அதிகள வில் திரண்டதால் கூட்ட நெரி சல் ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்போ உயிர்ச்சேதமோ ஏற் படாததால் போலிசார் நிம்மதி யடைந்தனர்.