மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கு ஆதரவாக சுவர்களில் சீனமொழி வாசகம்

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கு ஆதரவாக சுவர்களில் சீனமொழி வாசகம்

1 mins read
dbd92e4c-b4f2-4148-a9ec-05546f346eaf
திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் உள்ள சுவர்களில் சீனமொழியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள். படம்: ஏஎஃப்பி -

கோல்கத்தா: இந்தியாவிலேயே கோல்கத்தாவில்தான் சைனா டவுன் இருக்கிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகையில் இந்த சைனாடவுனிலும் தேர்தல் பிரசாரம் இதுவரை இல்லாத அளவுக்குச் சூடுபிடித்துள்ளது. மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக சைனாடவுனில் உள்ள சுவர்களில் வாசகங்கள் எழுதப் பட்டுள்ளன. ஆனால் மற்ற இடங்களில் உள்ள வாசங்களுக்கும் இந்த வட்டாரத்தில் உள்ள வாசகங் களுக்கும் வித்தியாசம் உள்ளது. சைனாடவுன் சுவர்களில் உள்ள வாசகங்கள் சீனமொழியில் எழுதப்பட்டுள்ளன. கோல்கத்தாவில் உள்ள சீன சமூகத்தினர் இம்முறை திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதை இது காட்டுவ தாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.