பெங்களூரு: பெங்களூருவின் யஷ்வந்த்பூர் பகுதியில் கட்டு மானப் பணி நடந்துகொண்டிருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் மாண்டனர். இந்தச் சம்பவம் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்தது. இதில் அங்கு தங்கியிருந்த இரண்டு பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். இதையடுத்து, போலி சாருக்குத் தகவல் கொடுக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார், படுகாயமடைந்த வர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கட்டடத்தைக் கட்டும் நிறுவனம் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கட்டுமானப் பணி நடைபெற்ற கட்டடம் அங்கீகரிக் கப்பட்டுள்ளதா, உரிய ஆவணங் கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா எனப் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவர் மரணம்
1 mins read

