சுடச் சுடச் செய்திகள்

பாலியல் தொந்தரவு செய்வதாக  என்.டி. ராமராவ் மனைவி மீது புகார்

விஜயவாடா: ஆந்திரா மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் பிரபல நடிகரும் தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகரும் சமூக சேவகருமான கோட்டி எனும் ஆனந்த் பால் என்பவர் வினுகொண்டா காவல் நிலையத்தில் லட்சுமி பார்வதி மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
“நான் வினுகொண்டா மண்டல் உப்பர் அப்பளம் பகுதியில் வசிக் கிறேன். எனக்கு லட்சுமி பார் வதியை நான்கு ஆண்டுகளாக தெரியும். அவரது குடும்பத்தினரு டன் நெருக்கமாக பழகி வந்தேன். கடந்த 18 மாதங்களாக அவர் என் னை காதலிப்பதாகக் கூறி ‘வாட்ஸ்அப்’ மூலம் தகவல்கள் அனுப்புகிறார். ஆபாச படங் களின் இணையத்தள தொடர்பு களையும் படங்களையும் எனக்கு அனுப்புகிறார். அவரது ஆசைக்கு இணங்கி நடந்தால் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசி ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் நல்ல பதவி பெற்றுத்தருவதாகவும் கூறு கிறார். ஆனால் நான் லட்சுமி பார்வதியை அம்மா போலத்தான் கருதினேன். ஆனால் அவரோ முறையற்ற காணொளிகளை எனக்கு அனுப்புகிறார். இது, எனது குடும்ப வாழ்க்கையில் இடையூறாக அமைந்துள்ளது. அவரது விருப்பத்துக்கு நான் அடி பணியாததால் பயங்கர விளைவு களை சந்திக்க வேண்டி வரும் என மிரட்டுகிறார். எனக்கும் என் குடும்பத்துக்கும் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும். லட்சுமி பார்வதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று புகாரில் ஆனந்த் பால் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் பேசிய வினுகொண்டா காவல்துறை ஆய் வாளர் டி.வி. சீனிவாசராவ், “கோட்டி என்ற ஆனந்த் பால் அளித்த புகாரை பெற்றுக்கொண் டோம்.  விசாரணைக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்வோம்,” என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon