'மோடி அவரின் டாடியுடன் வந்தாலும் அஞ்சோம்'

'மோடி அவரின் டாடியுடன் வந்தாலும் அஞ்சோம்'

1 mins read

கோவில்பட்டி: பாஜக ஆட்சிக்கு கூழைக் கும்பிடு போடும் அதிமுக கட்சியினரைப் போல் தங்களுக்கு மடியில் கனம் இல்லை என்றும் ஆகையால் மத்திய அரசாங்கத் தைப் பார்த்து பயம் இல்லை என்றும் அமமுக கட்சித் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தூத்துக்குடி தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார். தமிழக மக்கள், தொண்டர் களுக்கு மட்டுமே அமமுக தலை வணங்கும் என்றும் மோடி அவ ருடைய 'டாடி'யுடன் வந்தாலும் தங்களுக்குப் பயமில்லை என்றும் தினகரன் பேசினார். தமிழர்களை வஞ்சித்த மோடி ஆட்சி, ஊழலுக்குப் பெயர்போன அதிமுக எடுபிடி ஆட்சி, பல ஆண்டு காலம் பதவியில் இருந் தாலும் தமிழகத்திற்கு நன்மை எதுவுமே செய்யாத திமுக கூட் டணி ஆகியவற்றைத் இந்தத் தேர்தலில் நிராகரிக்கவேண்டும் என்றும் தமிழகத்தின் நலனை மீட்டெடுக்க, தமிழர் வாழ்வு மலர அவர்கள் அமமுகவுக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்றும் தினகரன் கேட்டுக்கொண்டார். பரிசுப்பெட்டி மூலம் வாக்காளர் களுக்கு அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தினகரன் குறிப்பிட்டார்.