மீண்டும் பொள்ளாச்சி: மாணவி கொலை, கைது, பெரும் அதிர்ச்சி

மீண்டும் பொள்ளாச்சி: மாணவி கொலை, கைது, பெரும் அதிர்ச்சி

2 mins read

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பல ஆண்டுகாலமாக நிகழ்ந்து வந்த பயங்கரமான பாலியல் கொடூரச் சம்பவங்களைக் காட்டும் ஆபாசக் காணொளிகள் நாடு முழுவதும் ஏற்படுத்திய பரபரப்பு சூடு இன்னமும் அடங்கவில்லை. இந்நிலையில் அங்கு புதிதாக கொடூரமான முறையில் ஒரு மாணவி கொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் மாநிலம் முழு வதும் இப்போது அதிர்ச்சி அலை களைக் கிளப்பிவிட்டுள்ளது. இந்தக் கொலை காதல் கொலையாக இருக்கலாம் என்றும் இதன் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்றும் போலிஸ் தெரிவித்தது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகதி, 20, என்ற மாணவி கோவை தனியார் மகளிர் கல்லூரி யில் படித்து வந்ததாகவும் அவர் கடந்த வெள்ளியன்று திடீரென்று காணாமல் போய்விட்டதாகவும் போலிசிடம் புகார் தரப்பட்டது. இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஓர் ஊரில் காணப் பட்ட ஓர் உடல் அந்த மாணவியின் உடல்தான் என்பது உறுதியானது. இதனையடுத்து போலிசார் பல குழுக்களை அமைத்து புலன் விசாரணை நடத்தினார்கள். பிரகதியை நான்கு ஆண்டு களாகக் காதலித்து வந்த நாட்டு துரை என்பவருக்கு அவரை மணம் முடித்துக்கொடுக்க இருந்த னர். வரும் 13ல் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் பிரகதியை வேறு ஒருவர் ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும் தெரிகிறது. தான் காதலித்த பெண்ணுக்குத் திரு மணம் நடக்கப்போகிறது என்பதை அறிந்துகொண்ட சதீஷ் குமார் என்ற அந்த நபர், பிரகதியைக் கடத்திக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலிஸ் அவரைக் கைதுசெய்துள்ளது. சதீஷ் குமார் ஏற்கெனவே திரு மணமானவர். அவர் அந்த மாண விக்கு உறவினர் என்றும் கூறப்படு கிறது. இருந்தாலும் இன்னும் பல கோணங்களிலும் போலிஸ் புலன் விசாரணை நடத்திவருகிறது. இதனிடையே, கொலையுண்ட மாணவியின் உடல் அவரின் பெற் றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.