புதுடெல்லி: நீதித்துறை, ரிசர்வ் வங்கி, சிபிஐ ஆகியவற்றை பாஜக சீரழித்து விட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து சாடியுள்ளார். பாஜகவிலிருந்து வெளியேறிய பின்னர் காங்கிரசில் இணைந்த துடன், பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்து வரும் அவர், நாட்டில் ஜனநாயகம் தழைக்கவேண்டும் எனில் காங்கி ரஸ் ஆட்சி அமைப்பதே ஒரே வழி என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆட்சியில் யாரேனும் கேள்விகளை எழுப்பினால் அவர் கள் தேசவிரோதிகள் என முத் திரை குத்தப்படுவதாகக் குறிப்பிட் டுள்ள சித்து, தற்போது ஜனநாய கம் என்ற பெயரில் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுவ தாகத் தெரிவித்துள்ளார். "பாஜகவின் 5 ஆண்டுகால ஆட்சி ஒரு பேரழிவு. வாக்கு றுதிகளை நிறைவேற்றாமல் இன்று அக்கட்சி அம்பலப்பட்டு நிற்கிறது. "காங்கிரஸ் ஆட்சியில்தான் பொருளாதாரம் சரிந்தது, பயங்கர வாதம் வளர்ந்தது என்று பாஜக கூறுமானால் அது கண்ணாடி வீட்டுக்குள் இருந்தபடி கல்லெறி வதற்கு சமம்," என்று நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.
ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக நவ்ஜோத் சிங் சித்து புகார்
1 mins read

