வருமான வரிச் சோதனைகள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி

வருமான வரிச் சோதனைகள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி

2 mins read

இந்தியாவில் பொதுத் தேர்தல் தேதி நெருங்க நெருங்க எதிர்க்கட்சியின ருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை திடீர் திடீரென அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் வேலூர் நாடாளு மன்றத் தொகுதியில் திமுக பொரு ளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராகக் களமிறங்கி உள்ளார். பத்து நாட்களுக்கு முன் அவரது வீட்டிலும் அவருக்கு நெருக்கமான வர்களின் வீடுகளிலும் சிமென்ட் கிடங்கிலும் வருமான வரித் துறை யினர் சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது என்றும் வாக்காளர்களுக்கு விநியோ கிப்பதற்காக அந்தப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், காங் கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் மத்தியப் பிர தேச மாநில முதல்வருமான கமல்நாத்திற்கு (படம்) நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான 50 இடங்க ளில் வருமான வரித் துறை யினர் நேற்று அதிரடி சோதனை மேற் கொண்டது பெரும் பரபரப்பைக் கிளப் பியது. திரு கமல்நாத்தின் முன்னாள் உதவியாளர் பிரவீன் கக்கட், முன் னாள் ஆலோசகர் ராஜேந்திர மிக்லானி உட்பட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. டெல்லி, போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் உள்ள அந்த இடங்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று அதிகாலை மூன்று மணிக்கே சோதனையைத் தொடங்கினர். சோதனைகளின்போது ஆவணங்களும் கணக்கில் காட்டப்படாத பணமும் கைப்பற்றப்பட்டதாகக் தக வல்கள் கூறின. வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் ஹவாலா பணம் பதுக்கப்பட்டுள்ள தாகக் கிடைத்த தகவல்களை அடுத்து அந்தச் சோதனைகள் இடம் பெற்றதாகக் கூறப்பட்டது. திரு கக்கடும் திரு மிக்லானியும் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்பாக தங்களின் பதவி களைத் துறந்தனர். இந்தச் சோதனைகள் குறித்து கருத்துரைத்த மத்தியப் பிரதேச காங் கிரஸ் தலைவர் ஒருவர், எதிர்க்கட்சி களை அரசியல் பழிதீர்க்கும் நோக் குடன் மத்தியில் ஆளும் பாஜக அரசு செயல்பட்டு வருவதாகக் கூறினார். அதற்கு, 'காவலாளி'களான தங்கள் மீது 'திருடர்கள்' புகார் கூறு வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது. பாஜக இப்படிச் சொன்னாலும் தேர்தலின்போது செலவுசெய்யப் பண மில்லாமல் எதிர்க்கட்சிகளை முடக்க வேண்டும் எனும் நோக்குடன் மத்திய, மாநில அரசுகள் இப்படி வருமான வரித் துறையினரை ஏவிவிடுவதாக அரசியல் பார்வையாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் குற்றஞ்சாட்டு கின்றனர். கறுப்புப் பணம் பதுக்குவோர் எவ ராக இருந்தாலும் நடவடிக்கை எடுக் கப்படுவதை வரவேற்கும் அவர்கள், அதே நேரத்தில் எதிர்க்கட்சியினரை மட்டும் குறிவைத்து இத்தகைய சோதனைகள் அரங்கேற்றப்படுவது ஏன் என்றும் கேள்வியெழுப்பினர்.2