நீலகிரி: திமுக தலைவர் ஸ்டா லினுக்கும் தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமிக்கும் இடையில் சவாலுக்குச் சவால் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. அதிமுகவின் அசைக்க முடி யாத தலைவியாக இருந்த ஜெய லலிதா மரணம் அடைந்தது மர்ம மாகவே இருக்கிறது என்றும் திமுக ஆட்சி உதயமானதும் ஜெய லலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தடாலடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். திமுக தலைவராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி, இரண் டாண்டு காலம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டிய முதல்வர், அவருக்கு ஏற் பட்ட நிலை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தும் என்றார். நீலகிரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரசாரம் செய்த பழனி சாமி, திமுகவைக் கடுமை யாகச் சாடினார். ஸ்டாலினும் எடப்பாடியும் தேர்தல் பிரசாரங்களில் ஆற்றும் உரை எல்லை மீறுவதாகவும் ஒருவரை ஒருவர் வசைபாடுவது அநாகரிக நிலையை எட்டுவதாக வும் கூறப்படுகிறது.
கருணாநிதிவீட்டுச் சிறை யில் வைக்கப்பட்டதாக பழனிசாமி குற்றச்சாட்டு
1 mins read

