மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை: அய்யாக்கண்ணு பின்வாங்கினார்

மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை: அய்யாக்கண்ணு பின்வாங்கினார்

1 mins read
8c9c91e8-5d23-4dfd-9c81-d1437b430d88
-

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து நின்று அவரை ஒரு கை பார்க்கப்போவதாக சவால்விடுத்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, அந்த முடிவில் இருந்து திடீரென்று பின்வாங்கி விட்டார். மோடிக்கு எதிராக வார ணாசியில் போட்டியிடப்போவது இல்லை என்று நேற்று அவர் அறிவித்தார். அந்தத் தொகுதியில் பிரதமரை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டி யிடப்போவதாக அய்யாக்கண்ணு ஏற்கெனவே அறிவித்திருந்தார். நேற்றைய அறிவிப்புக்கு முன்ன தாக டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை அவர் சந்தித்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கிறது என்றும் அதோடு மட்டுமின்றி தேர்தல் முடிந்ததும் விவசாயிகளுக்கு பாஜக சார்பில் மாநிலங்களவையில் உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் அமித் ஷா உறுதி கொடுத்ததாகத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அய்யாக் கண்ணு வாரணாசியில் மோடியை எதிர்க்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டதாகத் தகவல்கள் கூறின. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு, விவசாயிகளை மையப்படுத்தி 2017 முதல் அரை நிர்வாணப் போராட்டம், நிர்வாணப் போராட் டம், எலிக்கறி சாப்பிடும் போராட் டம், மண்டை ஓடு போராட்டம் போன்ற போராட்டங்களை அர சுக்கு எதிராக நடத்தியவர்.