பிரதமர் யார் என முடிவெடுக்கும் சக்தியாக மாநிலக் கட்சிகள் உருவெடுக்கும்

பிரதமர் யார் என முடிவெடுக்கும் சக்தியாக மாநிலக் கட்சிகள் உருவெடுக்கும்

2 mins read

புதுடெல்லி: இம்முறை நாடாளு மன்றத் தேர்தலில் முக்கிய தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது என பல்வேறு கருத் துக்கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் எனும் கேள்வியும் ஆர்வமும் மக் கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியா டுடே, டைம்ஸ் நவ், ஏபிபி நியூஸ் உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்கள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளன. அவற்றுள் கடைசி 10 கருத்துக் கணிப்புகள் பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப் பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. இது உண்மையாகும் பட்சத் தில் இவ்விரு கட்சிகளுமே பல் வேறு மாநிலக் கட்சிகளின், தங் கள் கூட்டணியில் இல்லாத சிறு கட்சிகளின் ஆதரவைக் கோர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக மாநிலக் கட்சி கள் உருவெடுக்கும். இதனால் பாஜக ஆட்சி யமைக்க கடும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த முறை பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பல கட்சிகள் இப்போது பாஜகவுக்கு எதிராக வரிந்துகட்டி உள்ளன. மேலும் மம்தா பானர்ஜி, மாயா வதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட் டோர் காங்கிரசுடன் கைகோக்கா விட்டாலும், பிரதமர் மோடிக்கு எதிராக முழங்கி வருகின்றனர். எனவே பாஜகவை ஆட்சியை விட்டு அகற்ற இம்மூவரின் தலை மையிலான கட்சிகள் ஆட்சிய மைக்க காங்கிரஸ் வழிவிடலாம். இதுபோக, மோடியும் ராகுலும் பிரதமராக எதிர்ப்பு கிளம்பலாம் என்றும் கருதப்படுகிறது. அத்த கைய சூழ்நிலையில், ராகுலுக்குப் பதிலாக பிரியங்கா முன்னிறுத்தப் படலாம் என்றும் மோடிக்கு பதிலாக வேறொருவர் பதவிக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.