இந்தியத் தேர்தல் களத்தில் கவனம் ஈர்க்கும் மூன்று பெண்கள்

இந்தியத் தேர்தல் களத்தில் கவனம் ஈர்க்கும் மூன்று பெண்கள்

2 mins read

புதுடெல்லி: இந்திய தேர்தல் களத் தில் மூன்று பெண்மணிகள் நாட் டின் ஒட்டுமொத்த வாக்காளர் களின் கவனத்தையும் ஈர்த்துள் ளனர். மூவருமே தேர்தல் களத்தில் மட்டுமல்லாது அன்றாட அரசியல் களத்திலும் பிரதமர் நரேந்திர மோடியை தீவிரமாக எதிர்த்து வருபவர்கள். அதேவேளையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் சிலருடன் இத்தேர்தலுக்காக கைகோக்கவும் முன்வந்துள்ளனர். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க நடப்பு முதல்வர் மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் தற்போது 64 வயதாகிறது எனில், அரசிய லுக்கு புதுமுகமான பிரியங்காவுக்கு இப்போது 47 வயதாகிறது என்பது மட்டுமே இம்மூவரிடமும் உடனடி யாகத் தென்படும் வித்தியாசம். மம்தாவைப் பொறுத்தவரை மிக நேர்மையான அரசியலுக்குச் சொந்தக்காரர், மிகத் தன்மையான, மிக எளிமையான, ஆரவாரமில்லாத அரசியல் தலைவர் என்று பெயர் எடுத்தவர். கனவில்கூட நரேந்திர மோடி யைக் கடுமையாக விமர்சிப்பவர் என்றுதான் அரசியல் கவனிப் பாளர்கள் இவரைக் குறிப்பிடுகிறார் கள். மோடி ஆட்சியை அகற்றி அவரை வீட்டுக்கு அனுப்புவதே எனது முதன்மைப் பணி என்ற முழக்கத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்காக களமிறங்கி உள்ள மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடந்த 2014 தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் பெரும்பாலானவற் றைக் கைப்பற்றி அரசியல் களத் தில் முக்கிய கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. தலித் சமுதாயத்தில் இருந்து அடையாளம் காணப்பட்ட தலை வரான உத்தரபிரதேசத்தின் மாயா வதி, தைரியமான அரசியல்வாதி என்று பெயர் எடுத்தவர். தலித் சமுதாயத்தின் பெரும் ஆதரவால் ஆட்சியைப் பிடித்தவர். அதேசமயம் உயர் சாதியினராக கருதப்படுபவர்களையும் அரவ ணைத்து அரசியல் களத்தில் தன்னை ஒரு சாமர்த்தியசாலியாக நிலைநிறுத்திக் கொண்டவர். மாயாவதி மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் உண்டு. அவர் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு களைச் சுமத்தியதும் உண்டு. எனினும் தேசிய அளவில் மம்தா வுடனும் தனது பரம எதிரியான சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவுடன் மாநில அள விலும் கூட்டணி அமைத்துள்ளார். இவரும் மோடி ஆட்சியை அகற் றுவதே குறிக்கோள் என்கிறார். இவ்விரு பெண் தலைவர்க ளுடன் கைகோத்துள்ள பிரியங்கா வின் குறிக்கோள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். குடும்ப அரசியல் எனும் விமர்சனத்தை நீண்ட காலமாக கேட்டு சலித்துப் போன நிலையில், கடந்த ஜனவரி யில்தான் அரசியல் களம் கண் டுள்ளார் பிரியங்கா. அசப்பில் இந்திராகாந்தி சாயலுடன் இருப்ப தால் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இவரது அரசியல் வருகை உற்சாகம் அளித்துள்ளது. கடந்த 2014 தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 71 இடங்களைக் கைப்பற்ற, காங்கிரசுக்கு இரு இடங்கள் மட் டுமே கிடைத்தன. இந்தப் பரிதாப நிலையை தலைகீழாக மாற்றும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத் துள்ளது காங்கிரஸ் தலைமை.