மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சினைகள் குறித்தும் 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்தும் பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் இடம்பெறாததால் தமிழக மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்திற்கும் கர்நாடகத்திற் கும் இடையிலான காவிரி நீர்ப் பங்கீடு, தமிழகத்திற்கும் கேரளா விற்கும் இடையே முல்லைப் பெரி யாறு போன்ற பிரச்சினைகள் தொடர்பாக பாஜக தேர்தல் அறிக் கையில் நேரடியாக எதுவும் குறிப் பிடப்படவில்லை. மாறாக, தண்ணீருக்கென தனி யாக அமைச்சு தொடங்கப்படும் என்று பாஜக உறுதியளித்துள்ளது. அதோடு, குடிநீர், பாசனப் பிரச் சினைகளுக்குத் தீர்வுகாணப்படும் என்றும் மறைந்த பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் கனவுத் திட்டமான நதிநீர் இணைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல் வோம் என்றும் பாஜக உறுதியளித் துள்ளது. தேசிய அளவில் 'நீட்' நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலும் தமிழ் வழியிலும் பயிலும் மாண வர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது வெகுவாகக் குறைந்து விட்டது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றபோதும் மருத்துவராக வேண்டும் என்ற தங்களின் கனவு 'நீட்' தேர்வு காரணமாக பறிபோன தால் அனிதா, பிரதீபா ஆகிய இரு மாணவிகள் உயிரை மாய்த் துக்கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. இதையடுத்து, 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் எனத் தமிழக அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. அதோடு, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டி யலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஆயினும், இவை குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. இது குறித்துக் கருத்துரைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், "பாஜக 'நீட்' தேர்விலிருந்து தமிழ கத்திற்கு ஒருபோதும் விலக்கு அளிக்காது. பாஜக தமிழக மக்க ளைத் தொடர்ந்து வஞ்சித்து வரு கிறது. ஆயினும், அதிமுக அக்கட் சியுடன் கூட்டணி அமைத்து உள்ளது," என்று சாடினார். மேலும், "இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ் கிருத மொழியைக் கற்க ஊக்கு விக்கப்படும் என்று பாஜக கூறி இருக்கிறது. இந்திய மக்கள் தாங்கள் விரும்பும் எந்த மொழி யையும் கற்கலாம். இந்நிலையில், ஒரு மொழியை மட்டும் கட்டாய மாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது," என்றும் அவர் சொன் னார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தயாரித்த முன் னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், "தமிழ் மண்ணிற்கும் பாஜகவிற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது," என்றார். 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் பள்ளிக் கல்வி மாநிலப் பட்டிய லுக்கு மாற்றப்படும் என்றும் காங் கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
'நீட்'டையும் தமிழகத்தையும் மறந்த பாஜக தேர்தல் அறிக்கை
2 mins read
படம்: தி இந்து -

