கோவை: கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் குறிப் பிடு கையில், "ஐம்பதாண்டுகளில் திரைத்துறையில் கிடைத்திராத மனநிறைவு தற்போதைய அரசி யல் பயணத்தில் கிடைத்துள்ளது. நான் செல்லும் இடங்களில் எல் லாம் சிறிய கிராமங்களில் மக் களின் கண்ணை பார்ப்பதில் இருந்து உத்வேகம் கிடைக்கிறது. எங்கள் சின்னம் 'டார்ச்லைட்' மக்களைப் பிரகாசப்படுத்தும். "தமிழக மக்கள் மீது இருக் கும் இழுக்கைத் துடைப்போம். இந்த முறை பிரதமர் தேர்வு இழுபறியாக அமையும். அதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் இருக்கும். 3வது அணிக்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இது மிக மிக வித்தியாசமான தேர்தல். புரட்சியின் விளிம்பில் தமிழகம் நின்று கொண்டிருக் கிறது. தமிழக மக்கள் தங்கள் கோபத்தை ஓட்டாக காட்டவேண் டும். தமிழகத்தின் சூழல்தான் எங்களை இணைத்திருக்கிறது. "மாநிலக் கட்சிகள் ஒன் றிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும். 3வது கூட் டணி மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நிறைய எம்பிக்கள் செல்வோம். நாடு முழுவதும் பெரும் தலைவர்கள் மக்கள் நீதி மய்யம் குறித்து யோசிக்கிறார் கள்," என்று கமல் பேசினார்.
கமல்: எங்கள் கட்சி சார்பில் நிறைய எம்.பி.க்கள் வருவார்கள்
1 mins read
கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். படம்: தமிழக ஊடகம் -

