எடப்பாடி: இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சிதான்

எடப்பாடி: இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சிதான்

1 mins read

ஊட்டி: ஊட்டியில் நடைபெற்ற பிர சாரக் கூட்டத்தில் முதல்வர் எடப் பாடி பழனிசாமி பேசுகையில், "நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி யில் திமுக சார்பில் ஸ்பெக்ட்ரம் ஆ.ராசா போட்டியிடுகிறார். "ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசாவும் தூத்துக்குடி தொகுதி யில் போட்டியிடும் கனிமொழியும் திகார் சிறையில் அடைக்கப்பட்ட னர். காங்கிரஸ்-திமுக ஆட்சி யில் இருந்தபோதுதான் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். "ஊழலுக்காக சிறை சென்றவர் களுக்கு வாய்ப்பு கொடுத்த மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த என்ன தகுதி இருக்கிறது? "திமுகவினர் மத்தியிலும் மாநி லத்திலும் பதவியில் இருந்தபோது மக்களுக்கு நன்மை செய்ய வில்லை. "குடும்பத்தினர் வளம் பெறு வதற்கான நடவடிக்கைகளை மட் டுமே மேற்கொண்டனர். இந்தியா விலேயே ஊழலுக்காக கலைக்கப் பட்ட அரசு திமுக அரசுதான்," என்றார் பழனிசாமி.