நீண்ட நாட்களுக்குப் பின் விஜயகாந்த் பேசினார்

நீண்ட நாட்களுக்குப் பின் விஜயகாந்த் பேசினார்

1 mins read

சென்னை: தேமுதிக தலைவர் விஜகாந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்திறந்து பேசும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. விரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களவை தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், இதுவரை விஜயகாந்த் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளாததும் பொதுவெளியில் பேசாததும் அக்கட்சித் தொண்டர் களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத் தியது. இந்நிலையில் பல மாதங் களுக்குப் பின்னர் விஜயகாந்த் பேசிய காணொளி அவரது அதிகாரத்துவ டுவிட்டர் பக்கத் தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "எனது உடல்நிலை மிகவும் நலமாக உள்ளது. கூடிய விரைவில் நான் பிரசாரத்தில் கலந்து கொள்வேன். மருத்துவ ரின் அறிவுரையின்படி தொடர்ந்து பிரசாரங்களில் பங்கேற்பேன். "தமிழகத்தில் அதிமுக கூட் டணிதான் வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் இடையேயான போட்டி என்பது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடை பெறும் போட்டி. இதில் தர்மம் தான் வெற்றி பெறும். திமுக என் றாலே தில்லுமுல்லு கட்சி என்று தான் அர்த்தம். மோடி நல்லவர்; அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்," என்று கூறியுள்ளார். விஜயகாந்தின் பேட்டியால் அவரது கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.