வென்றால் மீன் வெட்டித் தருவேன் - நடிகர் மன்சூர் அலிகான்

வென்றால் மீன் வெட்டித் தருவேன் - நடிகர் மன்சூர் அலிகான்

1 mins read
ff5ad87a-ba75-4161-82b6-45ced7a79de9
மீன்களை வெட்டி வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்.  படம்: ஊடகம் -

பழனி: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன் சூர் அலிகான் நிலக்கோட்டை பகுதியில் பிரசாரம் செய்துகொண் டிருந்தபோது மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது கட்சித் தொண்டர்கள் அவரை மருத் துவமனையில் சேர்த்தனர். சிகிச் சை முடிந்ததும் நேற்று அவர் மீண்டும் தனது பழைய பாணியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பழனியை அடுத்துள்ள வண்டி வாய்க்கால் பகுதியில் மீன் சந்தையில் மன்சூர் அலிகான் தமது ஆதரவாளர்களுடன் பிர சாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள வாத்துகளை தூக்கி கையாலே எடைபார்த்து விலை நிலவரங் களை கேட்டறிந்தார். அதன்பிறகு மீன் விலை நிலவரங்களைக் கேட்டறிந்து பொதுமக்களை அழைத்து விற்பனை செய்தார். அனைவரும் எனக்கு ஓட்டு போடுங்கள் நான் வாரம் தோறும் வந்து உங்களுக்கு மீன் வெட்டி தருகிறேன்," என்று மன்சூர் அலிகான் கூறினார்.