ஹைதராபாத்: தெலுங்கானாவில் நேற்று நடத்தப்பட்ட தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் பறிமுதல் செய்த ரூ.8 கோடி பாஜகவிற்கு சொந்தமானது எனத் தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடப்புக்கு வந்து உள்ளன. வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தேர்தல் நிலைக் குழு வினர், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதரா பாத்தின் முக்கிய பகுதியான நாராயன்குடாவில் தேர்தல் பறக்கும் படையினரும் காவல் துறையினரும் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சொகுசு காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தபோது காரில் உரிய ஆவணங்களின்றி கட்டுக் கட்டாக இருந்த ரூ.2 கோடியைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், வங்கிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஐவரிடம் இருந்த ரூ.6 கோடி பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரில் வந்த எழுவ ரையும் கைது செய்து அவர் களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையே சொகுசு வாக னத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.8 கோடி பாஜக வாக்காளர்களுக்கு கொடுப்பதற் காக கொண்டு செல்லப்பட்ட பணம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் கூறு கையில், "நாங்கள் பணத்தை எங்கள் கட்சியின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து உள்ளோம். அதனை அலுவலகத் திற்குக் கொண்டு செல்லும் வழியில் காவல்துறையினர் குறுக்கிட்டுப் பறிமுதல் செய் தனர். இது முழுக்க முழுக்க டிஆர்எஸ் கட்சியின் அரசியல் சதி," என்று குறைகூறினார். தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் தற்போதுதான் கோடிக் கணக்கான பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தெலுங்கானா: சோதனையில் சிக்கிய பாஜகவின் ரூ.8 கோடி
2 mins read

