கருத்துக்கணிப்புகளுக்குத் தடை

கருத்துக்கணிப்புகளுக்குத் தடை

1 mins read

தேர்தலை முன்னிட்டு கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பத்தி ரிகைகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் முதலிய பொது ஊடகங்கள் எந்தத் தொகு தியில் யாருக்கு வாய்ப்பு என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு களை வெளியிட்டு வந்தன. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கான கால அவகாசம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. அதற்கு மேல் தேர்தல் கருத்துக்கணிப்பு களை வெளியிட முடியாது. வழக்கமாக வாக்குப்பதிவு முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு வரை தேர்த லுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட அனுமதி உண்டு. ஆனால், பல கட்டத் தேர்தல்கள் நடக்கும்போது முதற் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்வரை மட்டுமே வெளியிட முடியும் என்பது குறிப் பிடத்தக்கது. அதேபோல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பைப் பொறுத்தவரை, அனைத்துக் கட்ட வாக்குப்பதிவும் முடியும் நாளன்று மாலை வாக்குப்பதிவு இறுதி நேரத்துக்குப்பின் கருத்துக் கணிப்பு வெளியிட அனுமதி அளிக்கப்படுகிறது.