புதுடெல்லி: மக்களவை தேர்தலுக் கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்குவதால் இந்திய நேரப்படி நேற்று மாலை 6 மணியிலிருந்து தேர்தல் பிரசாரங் களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 17வது மக்களவை பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி முதற்கட்டமாக ஆந்திரா, தெலுங் கானா, உத்தரப் பிரதேசம், உத்தர காண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. அதிகபட்சமாக, ஆந்திராவில் 25 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசமும் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசும் தனித்து களம் காண்கின்றன. இரண்டாம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மாதம் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். இதையொட்டி, அரசியல் கட்சியினர் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு நடை பெறும் தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. குறுஞ்செய்தி, ஃபேஸ்புக், டுவிட்டர், தொலைக் காட்சி, வானொலி போன்ற ஊட கங்கள் மற்றும் மின்னியல் சாத னங்கள் வழியிலான பிரசாரங் களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின் றனர். இதுவரை ஆந்திர மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகளால் 160 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமிற்கு படகு மூலம் நேற்று வந்து இறங்கிய தேர்தல் அதிகாரிகள் மின்னியல் வாக்கெடுப்பு இயந்திரங்களைத் தூக்கிச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

