மத்திய பிரதேசத்தில் ரூ.281 கோடி வரை கணக்கில் வராத பணம்

மத்திய பிரதேசத்தில் ரூ.281 கோடி வரை கணக்கில் வராத பணம்

2 mins read

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக வரு மான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.281 கோடி வரை கணக்கில் வராத பணம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அந்தத் துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், மத்திய பிரதேசத்திலிருந்து ஒரு பகுதி பணம், டெல்லியில் இருக்கும் முக்கிய அரசியல் கட்சிக்குப் பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அதிரடி சோத னையில் கணக்கில் வராத ரூ.14.6 கோடி, 252 மதுபான போத்தல்கள், சில வெடிபொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் பணப் பரிமாற்றம் குறித்து தகவல் எழுதி வைக்கப்பட்டிருந்த நாட் குறிப்பு, கணினிக் கோப்புகள் முதலானவையும் இந்தச் சோத னையில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. சுமார் ரூ.230 கோடி வரை பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இதில் 80 நிறுவனங்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என அந்த அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமான வரி ஏய்ப்பு, தேர்தலில் ஹவாலா பணப்புழக்கம் ஆகிய புகார்களின் அடிப்படையில் மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்தின் முன்னாள் தனிச் செய லாளர் பிரவீன் காக்கர் மற்றும் அவரது ஆலோசகர் ராஜேந்திர குமார் மிக்லானி ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள் உட்பட 52 இடங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் ஆளும் காங் கிரஸ்-மஜத கூட்டணிக் கட்சி யினருக்கு நெருக்கமானவர்களின் வீட்டில் சென்ற வாரம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த திடீர் சோத னையை அம்மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமி, "அரசு அமைப்பு களை மத்திய அரசு தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தி வருகிறது," என்று கடுமையாக விமர்சனம் செய்தார். மத்திய அரசு வருமான வரித் துறையை அரசியல் ஆதாயத்துக் காக பயன்படுத்தி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் வருமான வரித் துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் இதன் தொடர்பில் சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தது. "வருமான வரித் துறை நடத்தும் சோதனைகள் எந்தவித பார பட்சமும் இன்றி அமைய வேண்டும். சோதனை நடத்தப் போவதென்றால், தேர்தல் ஆணை யத்திடம் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்," என்று அது குறிப்பிட்டது.