புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை நெருக்கடியில் தத்தளித்து வருகிறது என்று முன்னாள் அரசு அதிகாரிகள், ஆட்சியமைப்பு ஊழியர்கள் என்று 66 பேர் அதிபர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். தேர்தல் ஆணைய நம்பகத்தன்மை நெருக்கடியில் அவதிப்பட்டு வருவதால் வரவிருக்கும் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என்ற ஐயம் எழுந்துள்ளதாக இவர்கள் அதிபரிடம் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்துவதில் ஆளும் பாஜகவுக்கு சாதகமும் சலுகையும் காட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகள் எழுப்பிவரும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை நெருக்கடியில் இருப்பதாக அதிகாரிகள் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
'தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மை நெருக்கடியில் உள்ளது'
1 mins read

