தேர்தல் முடியும் வரை மோடியின் சுயசரிதைத் திரைப்படத்திற்குத் தடை

தேர்தல் முடியும் வரை மோடியின் சுயசரிதைத் திரைப்படத்திற்குத் தடை

1 mins read
45979153-ddda-46b1-abdb-2c86119720c1
-

இந்தியப் பொதுத்தேர்தல் முடியும் வரை பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. ஓமங்க் குமார் இயக்கியுள்ள 'பி.எம் நரேந்திர மோடி' என்ற இந்த திரைப்படத்தில் திரு மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தினால் மக்கள் உணர்ச்சிவயப்பட்டு பாரதிய ஜனதாக் கட்சிக்கு வாக்களிப்பர் என்ற புகாரை காங்கிரஸ் முதலான எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு அளித்தன. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அபாயம் இதுபோன்ற படங்களுக்கு இருப்பதால் இத்தடையை விதிப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.