தூத்துக்குடி: தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலை யில், "என்னைப் பார்த்தால் உங் கள் வீட்டுப் பெண்ணாகத் தெரிய வில்லையா?" என்று கேட்டு தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு சேகரித்து வருகிறார். அவரை தாய்க்குலங்கள் பலரும் கட்டியணைத்து அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். தமிழிசையைப் போலவே கனி மொழியும் தூத்துக்குடி தொகுதி யில் திமுக சார்பில் போட்டியிடு கிறார். 'நாடாளுமன்றப் புலி' என்ற பட்டம்பெற்றுள்ள கனிமொழி, தூத் துக்குடியின் பெண் புலியாகவும் செயல்படுவார்„என்று தூத்துக் குடியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். தூத்துக்குடியின் வடக்கு ஆத்தூரில் பிரசாரத்தில் தமிழிசை பேசியபோது, "என்னைப் பார்த்தால் உங்கள் வீட்டுப் பெண்ணாகத் தெரியவில்லையா? திமுக வேட் பாளர் கனிமொழி கடந்த ஓராண் டாக எங்கே இருந்துவிட்டு வந்தார் என உங்களுக்குத் தெரியும். அப் படிப்பட்டவரா உங்களுக்குத் தேவை? "என்னை சகோதரியாக, மக ளாக, பேத்தியாகக் கருதி வெற்றி பெறச் செய்யுங்கள். நான் ஒரு டாக்டர். என்னை வெற்றி பெறச் செய்தால் எம்பியாக செயல்படுவ துடன் டாக்டராகவும் உங்களுடன் இருந்து இலவசமாக மருத்துவ சேவையும் செய்வேன்," என்றார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கனி மொழிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த ஸ்டாலின் "கவிஞர், சமூ கப் போராளி என பல முகங்களைக் கொண்ட தனது தங்கை கனி மொழிக்கு உதயசூரியன் சின்னத் தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அனைத்துப் பிரச் சினைகளுக்கும் கனிமொழி தீர்வு காண்பார்," என்றார் அவர்.
தமிழிசையை கட்டியணைத்து வரவேற்ற தாய்க்குலங்கள்; கனிமொழி பெண் புலி என புகழாரம்
2 mins read
இரட்டை இலை சின்னத்தில் உள்ள ஓர் இலையில் முதல்வர் பழனிசாமியையும் மற்றொரு இலையில் தமிழிசையையும் இணைத்து ஆரத்தி தட்டை நீட்டி தமிழிசையை கட்டியணைத்து வரவேற்றுள்ள தூத்துக்குடி தாய்க் குலங்கள். படம்: ஊடகம் -

