மானாமதுரை: என் மனைவி காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றுவதால் மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இந்தச் சம்பளமே குடும்பத்தை நடத்துவதற்கு எனக்குப் போது மானது. நான் யாரிடமும் லஞ்சமோ, கமிஷனோ வாங்கமாட்டேன் என்று போகும் இடங்களில் எல்லாம் பிரசாரத்தின்போது கூறி வருகிறார் அமமுக சார்பில் போட்டியிடும் மாரியப்பன் கென்னடி. மானாமதுரை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதி முகவின் நாகராஜன், திமுகவின் இலக்கியதாசன், அமமுக சார்பில் மாரியப்பன் கென்னடி போட்டி யிடுகின்றனர். மூவருக்கும் இடையே பலத்த போட்டி உள்ளது. மாரியப்பன் பேசியபோது, மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதைத் தடுக்க வேண்டுமெனில் நான், எம்எல்ஏவாக வேண்டும். மற்றவர்கள் எம்எல்ஏவாக வந்துவிட்டால், அவர்கள் கமிஷன் பெற்று மணல் குவாரிகளை அமைத்துவிடுவர்," என்றார். "இப்போதைக்கு வாக்கு வாங்குவதற்காக எங்கண்ணன் இப்படிப் பேசுகிறார், பிறகு எப்படி மாறுவாரோ?" என கிண்டலாகப் பேசியுள்ளனர் அவரின் ஆதர வாளர்கள்.
'மனைவியின் வருமானமே போதும்; கமிஷன் தேவையில்லை'
1 mins read

