பிரசாரத்தில் கவனம் ஈர்க்கும் அண்ணியார்

பிரசாரத்தில் கவனம் ஈர்க்கும் அண்ணியார்

2 mins read
604c7291-3803-4b02-a89e-ad3b3c572d51
-

சேலம்: தேர்தல் பிரசாரக் களத்தில் விஜயகாந்த் இல்லாத குறையை அண்ணியார் என்று தேமுதிகவினரால் அன்பாக அழைக்கப்படும் பிரேமலதா விஜயகாந்த் போக்கி வருகிறார். அவர் அதிமுக கூட் டணி வேட்பாளர்கள் போட்டி யிடும் தொகுதிகள் எங்கும் அனல் கக்கும் பிரசாரங்களைச் செய்துவருகிறார். தனது கட்சி வேட்பாளர்களை மட்டுமின்றி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து 40 மக்களவைத் தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் தேமுதிகவின் பொரு ளாளர் பிரேமலதா. பிரசாரத்தின்போது விஜயகாந் தைப் போலவே சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறார். அதேநேரத்தில் பிரசாரத்தில் இப்படி முன்னுக்குப் பின் முர ணான கருத்துகளையும் தவறான தரவுகளையும் பிரேமலதா தெரிவிப் பது கூட்டணிக் கட்சியினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி வருவ தாகவும் கூறப்படுகிறது. பிரசாரங்களில் தைரியமாகவும் அனல் பறக்கும் வகையிலும் அவர் பேசுவது தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதா இல்லாத இடத்தை நிரப்ப பிரேமலதா முயல் வதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷை ஆதரித்து, சேலம் மாவட் டம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கூடமலை, தெடாவூர், வீரகனூர், தலைவாசல் ஆகிய பகுதியில் பிரசாரம் செய்த பிரேமலதா, தமிழ கத்தில் நிலவும் பிரச்சினைகள் அனைத்துக்குமே திமுகதான் காரணம் என குற்றம்சாட்டினார். "தமிழகத்தில் இன்றைய பிரச் சினைகளாக உள்ள நீட் தேர்வு, மீத்தேன் திட்டம், கெயில் திட்டம், காவிரி, முல்லைப் பெரியாறு விவ காரம் என அனைத்துக்குமே கார ணம் திமுகதான். திமுக கை யெழுத்து போட்டதால்தான் இப் பிரச்சினைகள் தமிழகத்துக்குள் வந்தன. "சேலம் மாவட்டத்தில் குடிநீர், விவசாயத்துக்குக் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே மேட்டூர் உபரிநீர் திட்டத்தை செயல் படுத்தி காவிரியுடன் சரபங்கா, திருமணி முத்தாறு, வசிஷ்ட நதி, சுவேத நதி ஆகியவற்றுடன் இணைத்து தண்ணீர் தட்டுப் பாட்டை போக்குவோம். "தலைவாசல் தொகுதியில் உணவுப் பூங்கா அமைத்து, 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்," என்று அவர் பேசினார்.