உணவகத்தில் அரசியல் பேசுவதற்கு அனுமதியில்லை

உணவகத்தில் அரசியல் பேசுவதற்கு அனுமதியில்லை

1 mins read

சென்னை: சென்னை உணவகம் ஒன்று தனது கடையின் வாயிலில் விளம்பரப் பதாகை ஒன்றை வைத்துள்ளது. அதில் உண வகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது சொத்துச் சந்தை, வியாபாரம், அரசியல் குறித்துப் பேச அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது அரசியல் பேசும் நேரம். பொது இடங்களில் எங்கு பார்த் தாலும் அரசியல் பேசுவதை மக் கள் வாடிக்கையாக வைத்துள்ள னர். இவர்கள் சர்ச்சைக்குள்ளான தலைவர்கள், சாதிப் பிரச் சினைகள், மத கலவரங்கள் குறித்து பேசும்போது அருகே சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர் களுக்கு இது எரிச்சல் ஊட்டு வதாக இருக்கலாம். ஒருவருக்கு பிடித்த அனைத்து விஷயங்களும் எல்லாருக்கும் பிடிக்கவேண்டும் என்று எதிர் பார்க்கக்கூடாது என்பதால் இப்படி அரசியல் பேச அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.