தேனியில் கொட்டும் 'பணமழை'

தேனியில் கொட்டும் 'பணமழை'

1 mins read

தேனி: தேனி தொகுதியில் அதி முக பொதுக்கூட்டம், ஊர்வலம், பிரசாரத்தில் 'டோக்கன்' வழங்கி பணம் தரப்படுகிறது என காங்கிரஸ் தேசியச் செயலர் சஞ்சய் தத் குற்றம்சாட்டினார். தேனியில் அவர் கூறியபோது, "துணை முதல்வர் பன்னீர்செல்வத் தின் சொந்த தொகுதியான தேனி யில் தண்ணீர் உள்ளிட்ட அடிப் படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வில்லை. தமிழகத்தில் ரயில் ஓடாத மாவட்டம் தேனி. "நாளை 12ஆம் தேதி காங் கிரஸ் தலைவர் ராகுல் தேனி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். துணை முதல்வர் மகன் போட்டி யிடும் தேனியில் விதிமீறல்கள் நடக்கின்றன. "பொதுக்கூட்டம், ஊர்வலம், பிரசாரத்தில் 'டோக்கன்' வழங்கி பணம் தரப்படுகிறது. போடியில் ஆணையத்தின் அனுமதியின்றி அதிமுக கூட்டம் நடத்தியுள்ளனர். "சேலை, குடம், சுவீட் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் ரூ.25,000, ரூ.30,000 வழங்கப்படுகிறது. இதை கண்காணிக்க சிறப்புப் பார்வையாளரை நியமிக்க வேண்டும்," என்றார்.