சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இந்த நான்கு தொகுதிகளில் இரண்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் என்று தெரியவந்துள்ளது. திருப்பரங்குன்றம், அரவக் குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு போட்டியிடுபவர்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப் படவில்லை. கடந்த 2016 தேர்தலில் திருப் பரங்குன்றத்தில் வெற்றிபெற வேண்டியவர் டாக்டர் சரவணன் என்பது திமுகவின் கணிப்பு. அதனால் இவ்வளவு நாட்களாக காத்திருந்த சரவணனுக்குதான் மீண்டும் திருப்பரங்குன்றத்தில் இடம் தர வாய்ப்புள்ளதாக தெரி கிறது. அதேபோல அரவக்குறிச்சி தொகுதியைப் பொறுத்தவரை வேட்பாளர் செந்தில்பாலாஜியின் பெயர் அடிபடுகிறது. திமுகவைப் பொறுத்தவரை செந்தில்பாலாஜியின் அக்கறையும் கரிசனமும் கண்டிப்பாக கரூர் மாவட்டத்துக்கு அவசியமான ஒன்றாகும். பசை உள்ளவர் என்பதால் சகலமும் சௌகரியப் படும் என்பதே திமுகவின் கணக்கு. கட்சி மீது செந்தில் பாலாஜி வைத்துள்ள விசுவாசத் துக்குப் பரிசாகவே அரவக் குறிச்சியில் அவர் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. சூலூர், ஒட்டப்பிடாரம் தொகுதியைப் பொறுத்தவரை இன்னும் வேட்பாளர்கள் பரி சீலனையில் உள்ளதாகக் கூறப் படுகிறது. இங்கு வேட்பாளர்கள் யார் நிறுத்தப்படலாம் என்பது குறித்து ஆலோசனைக் கூட்டமும் நடத்தப் பட்டு வருகிறது. எனினும் நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே திமுக தரப்பில் பம்பரமாக சுழன்று வெற்றியைப் பெற வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
தயார் நிலையில் இரு திமுக வேட்பாளர்கள்
1 mins read

