ரூ.2.47 கோடிக்கு அழியாத மை

ரூ.2.47 கோடிக்கு அழியாத மை

1 mins read

சென்னை: தமிழகத்தில் ஓட்டுப்போடும் வேட்பாளர்களின் விரல்களில் 'மை' வைப்பதற்காக 2.47 கோடி ரூபாய் மதிப்புள்ள அழியாத மை மைசூரிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 18ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. விடுபட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19ல் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இத்தேர்தலில் 2.92 கோடி ஆண்கள், 3.02 கோடி பெண்கள், 5,790 திருநங்கையர் என மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்கள் வாக்களிப் பதற்கு 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.