சேலம்: சேலம் நாடாளுமன்றத் தொகுதி, மக்கள் நீதி மைய வேட்பாளர் பிரபு மணிகண்டனை ஆதரித்து சூரமங்கலம், உழவர் சந்தை, அம்மாபேட்டை ஆகிய இடங்களில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியபோது, "தமிழகத்தில் மக்களுக்கு அடிப்படை வசதியில்லை. எதையும் செய்யாமல் இந்த அரசு பணத்தை மட்டும் மூட்டை கட்டிக் கொண்டுள்ளது. எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றதும் பணிகளை முறையாக சரிவர செய்யாவிட்டால் அவரது பதவி விலகல் கடிதத்தை வாங்கி உங்கள் கையில் கொடுப்பது என் கடமை," என மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல்ஹாசன்: முறைதவறுபவர்கள் பதவி விலகுவார்கள்
1 mins read

