தம்பிதுரை: இரட்டை இலையைத் தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை

தம்பிதுரை: இரட்டை இலையைத் தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை

1 mins read

கரூர்: இரட்டை இலையைத் தோற்கடிப்பதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை, இனியும் பிறப்பது கடினம் என்று கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குத் தொடர உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் காங்கிரஸ் சார்பில் ஜோதி மணியும் போட்டியிடுகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.